×

அரியானாவில் 40வது அகில இந்திய போட்டி 3 தங்கப்பதக்கம் வென்றது சென்னை மாநகர குதிரைப்படை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: அரியானா மாநிலத்தில் நடந்த 40வது அகில இந்திய காவல் துறை குதிரையேற்ற போட்டியில் சென்னை மாநகர குதிரைப்படை 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வெற்று சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து குதிரைப்படையினரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் 40வது அகில இந்திய அளவிலான காவல்துறை குதிரைப்படையினருக்கான குதிரையேற்ற போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான தகுதித் தேர்வில் சென்னை மாநகர காவல்துறையில் உள்ள குதிரைப்படை வெற்றி பெற்று தேர்வானது. அதைதொடர்ந்து கடந்த 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் சென்னை மாநகர குதிரைப்படையினர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் சென்னை மாநகர குதிரைப்படை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் மற்றும் 4 கேடயங்களையும் பெற்று சாதனை படைத்தது. அதைதொடர்ந்து தங்கப்பதக்கத்துடன் சென்னை திரும்பிய குதிரைப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது குதிரைப்படையினர் தாங்கள் பெற்ற தங்கப்பதக்கங்கள், கேடயங்கள் உள்பட 10 பதக்கங்களை கமிஷனரிடம் காண்பித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6ம் அணி தளவாய் தேஷ்குக் சேகர் சஞ்சய் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post அரியானாவில் 40வது அகில இந்திய போட்டி 3 தங்கப்பதக்கம் வென்றது சென்னை மாநகர குதிரைப்படை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Cavalry ,40th All India Competition ,Ariana ,Commissioner ,Shankar Jiwal ,Chennai ,40th All India Police Equestrian Competition ,
× RELATED இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி...